அதிரை நியூஸ்: ஆக.28
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து (28-08-2020) அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
கஜா புயல் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் பேரூராட்சி – ஏரிப்புறக்கரை திட்டப்பகுதியில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூபாய் 35.28 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் அருகே அக்னியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நசுவினி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், ஏனாதி கிராமத்தில் மகாராஜசமுத்திரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய ஒரு நவீன நீரேற்று பாசனத் திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கு ரூபாய் 32 கோடிக்கான மதிப்பீடு அரசின் பரிசீலனையில் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டம், தம்பிகோட்டை கிராமம், அமெரிக்குளம் ஏரிக்கு பாமணியாற்றில் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரேற்று பாசனத்திட்டம் அமைத்து நீர் வழங்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து (28-08-2020) அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.