.

Pages

Saturday, August 22, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு!

அதிரை நியூஸ்: ஆக.22
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்கும் பணியில் கூடுதலாக செவிலியர்கள் தற்காலிமாக (மூன்று மாதங்களுக்கு) ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளது.

செவிலியர் பணிக்கு Diploma in nursing பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பிக்க விரும்புவோர் தன் சுய விபர படிவம், கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் ஆகியவைகளுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை நேரில் சந்தித்து விண்ணப்பிக்கவும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.