.

Pages

Thursday, August 20, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79-வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: ஆக.20
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 14/08/2020 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில், நமதூர்வாசிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
சிறப்பு அழைப்பாளர்கள் : ஹாஜி ஜனாப் பரக்கத் சார் ABM தலைவர் (தலைமையகம்), ஹாஜி. ஜனாப் அப்துல் ஹமீது செயலாளர்  (தலைமையகம்)

தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் பைத்துல்மாலின் இவ்வரிடம் குர்பானித்திட்டம் இக்காலகட்டத்திலும் மிகவும் சிறப்பாக சேவையை செம்மையாக நின்று பணியாற்றிய ABM-ன் தலைமையகத்திற்கும் இந்த திட்டத்திற்காக உதவி மற்றும் தங்களின் பங்குகளை உதவிய அதிரைவாசிகள் அனைவர்களுக்கும் ஒருமனதாக நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இதைக்காட்டிலும் வரும் வரிடம் சிறப்பாக செயல்பட துஆ செய்யப்பட்டது.

2) அதிரை பைத்துல்மாலின் துணை தலைவர் மர்ஹும் ஹாஜி S.K.M.ஹாஜா முகைதீன் சார் அவர்கள் மறைவு அதிரை பைத்துல்மாலுக்கு மட்டுமல்ல அதிரை நகருக்கே ஏற்பட்ட பேரிழப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தே நமக்கு சிறந்த ஆசானாகவும் துவக்கத்திலிருந்தே இறந்து போகும் வரை நம் அனைவருக்கும் சிறந்த ஆலோசகராகவும் ABM துணை தலைவராகவும் அதிரை பைத்துல்மாலின் ஒரு அரணாகவும் இருந்து வந்தார்கள் அப்பேற்பட்ட சிறந்த மகானை இழந்து வாடும் ABM-ன் தலைமையகம் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்காகவும் மேலும் ABM-ன் பொருளாளர் ஹாஜி S.M.முகமது முகைதீன் அவர்களின் மனைவியரின் இழப்பிற்காகவும் இக்கூட்டத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து அவர்களுக்காக துஆ செய்யப்பட்டது.

3) தற்சமயம் அதிரையில் ஏற்பட்டுள்ள COVID-19 அசாதாரண சூழ்நிலை ( அச்ச உணர்வு ) பற்றியும் அதற்கான பாதுகாப்பை எந்த வகையில் முன் எடுத்து செல்லலாம் என நீண்ட கலந்தாய்வு நடைபெற்று இறுதியில் பல டாக்டர்களை முன்னிறுத்தி செயல்பட்டுவரும் அதிரை COVID-19  பாதுகாப்பு வாட்சப் குழு மூலமும், சம்சுல் இஸ்லாம் சங்கம் மூலம் சேர்ந்து அதிரை பைத்துல்மால் ஒன்றிணைந்து தற்சமய சூழ்நிலையை நமதூரின் அமைப்பான அனைத்து முஹல்லா கமிட்டியின் கவனத்தில் கொண்டு சென்று நமதூருக்கு மட்டும் தனிப்பட்ட COVID சென்டரை நமதூரிலோ அல்லது ராஜாமடத்திலோ  அமைத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதி குறைந்து அனைவரும் COVID TEST எடுப்பதற்கு முன்வருவார்கள் இதன் மூலம் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டது.

4) நமதூரில் தற்சமயம் ஏற்பட்டுள்ள மருத்துவ குறைபாடுகள் டாக்டர்களின் சிகிச்சை குறைவதற்கான சாத்தியக்கூறு  பற்றியும் அதனை உடனே சரி செய்தால் மன உளைச்சல், பயம், பீதி இவைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முஹல்லாவிலும் அந்தந்த முஹல்லா பொறுப்புதாரிகளின் மூலம் COVID-19  PRECAUSIONS தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எந்த அளவு முக்கியத்துவம் என்பதனை எடுத்து சொல்லி கண்டிப்பாக அதனை பின்பற்றுமாறு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவர்களும் அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ABM தலைமையகம் மூலம் நமதூருக்கு முதன் முதலில் சிறந்த ஹோமியோபதி நோய் எதிர்ப்புசக்தி மருந்து “ஆர்சனிகம் ஆல்பம் 30C” மாத்திரை திட்டத்தை அறிமுகம் செய்து இரண்டு கட்டங்களாக 4200 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டதற்காகவும் இதனை கொண்டு நமதூரிலுள்ள பல அமைப்புகளும் சங்ககங்களும் விநியோக செய்ததின் மூலம் ஊர்மக்களின் பயத்தையும் பாதுகாப்பையும் போக்க உறுதுணையாகவும் இருந்த அனைவர்களுக்காகவும்  இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

6) தற்சமயம் நமதூரில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை மறுவதற்காக வேண்டி அனைவர்களும் துஆ செய்வதுடன் சில உள் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி கொண்டால் வரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க முடியும் அதன் அடிப்படையில், அதிரை மேம்பாடு சங்கத்திற்கான ஏற்பாடுகளில் முழு ஒத்துழைப்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

i) முக கவசம் அணிதல் அவசியம் கட்டாயம் ( தொழுகை நேரங்களிலும் )

ii) சமூக இடைவெளியை பேணுதல் அவசியம் (அனைத்து  இடங்களிலும் )

iii) பள்ளிவாசல்களுக்கு செல்லும் பொது முஸல்லாவை கொண்டு செல்லுதல் ( இடைவெளி விட்டு தொழுதல் )

iv) வீணான கூட்டம் வீண் பேச்சுக்கள் பொது இடங்களில் தவிர்ப்பது

v) முதியவர்கள் மற்றும் அசுகம் உள்ளவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்வது

vi) அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியை வருவதை தவிர்ப்பது

vii) பொது இடங்களுக்கோ பள்ளிகளுக்கோ சென்று வந்தவுடன் SANITIZER பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல்

Viii) வெளிஊர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 14 நாட்கள் HOME QUARANTINE-ல் இருப்பது  பாதுகாப்புக்காக

இதுபோன்ற கட்டுப்பாடுகளை நமதூரில் அனைவர்களும் ( பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் ) கடைபிடித்தால் இந்த கொடிய நோயிலிருந்து முடிந்த அளவு பாதுகாப்பை பெற முடியும் என்பதாலும் நமதூரில் ஏற்பட்டிருக்கும் இந்த சோதனை மாறவேண்டி அனைவர்களும் கடைபிடிப்பது தற்சமய காலகட்டத்தின் அவசியமான ஒன்று ஆகவே அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து நமதூர் மக்களை காப்பாற்ற முன்வருமாறு இக்கூட்டத்தின் மூலம் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) எங்களது 79-வது கூட்டத்திற்கு கலந்து சிறப்பித்த தலைவர் ஜனாப்.பரக்கத் சார் மற்றும் ஹாஜி ஜனாப் செயலாளர் அப்துல் ஹமீது காக்கா மற்றும் தமாம் கிளை தலைவர் ஜனாப் புஹாரி மற்றும் நமது கிளை நிர்வாகிகள் பொறுப்புதாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 80-வது அமர்வு அடுத்த மாதம் 11ம் தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.