அதிரை நியூஸ்: ஆக.11
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் கலந்துகொண்ட நகைச்சுவை நிகழ்ச்சி இன்று (11.08.2020) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பட்டுகோட்டை பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடம் ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்றுவருபவர்களின் மன அழுத்தத்தை போக்கிடும் வகையில், கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடம் ஆகிய இடங்களில் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் கலந்து கொண்ட நகைச்சுவை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மன அழுத்தம் அடையாமல் எவ்வாறு விரைவாக குணமடைவது, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவை குறித்து நகைச்சுவை நடையில் ரோபோ ஷங்கர் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் யோகா வகுப்பு மற்றும் கேரம் செஸ் போன்ற விளையாட்டுகளுக்கான போர்டுகள் தலா இரண்டு நபர்களுக்கு ஒரு போர்டு வீதம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.