.

Pages

Thursday, August 20, 2020

தஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக சித்தா கோவிட் தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஆக.20
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன் முதலாக சித்தா கோவிட் தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முதலாக கும்பகோணம் கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் 19.08.2020 புதன்கிழமை அன்று 50 படுக்கைகள் கொண்ட சித்தா கோவிட் தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சித்தா கோவிட் தடுப்பு மையத்தில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு புற மருத்துவமாக வேது பிடித்தல், மஞ்சள் திரி புகை நுகர்தல், சுவையின்மை மற்றும் உணர்வின்மையை போக்கும் ஓமம் பொட்டனம் முகர்தல், உப்புத்தண்ணீர் வாய் கொப்பளித்தல் ஆகிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் நுரையீரலை பலப்படுத்தும் வகையில் வர்மா புள்ளிகள் ( சுயமாக செய்து கொள்ளும் முறை) மற்றும் யோகா பயிற்சிகள் அனைத்தும் கொடுக்கப்படுகிறது. உள்மருந்தாக நோயாளிகளின் குறிகுணங்களுக்கு ஏற்ப சித்த மருந்துகளான கபசுர குடிநீர் மற்றும் மூலிகை தேநீர் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் மேற்படி சிகிச்சையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.