.

Pages

Friday, August 14, 2020

கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஆக.14
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் கருவியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வல்லம் கொரோனா சிகிச்சை மையம், கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையம், பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கொரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் எனப்படும் பிராணவாயு அளவு கண்டறியும் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் எனப்படும் உடற்வெப்ப அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றை கட்டாயம் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்தி அவ்வபோது தங்கள் உடலின் பிராணவாயு அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

பிராணவாயு அளவு குறையும்பட்சத்தில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுகிட வேண்டும். மேலும், பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்தி வீட்டிலுள்ள வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள் தங்கள் உடலின் பிராணவாயு அளவு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருந்தகங்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் மருந்தகங்களின் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.