.

Pages

Friday, August 21, 2020

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி: LKG சேர்க்கையில் 25% இட ஒதுக்கீடு!

அதிரை நியூஸ்: ஆக.21
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 2020 21 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம்  25 % இடஒதுக்கீட்டில் (எல்.கே.ஜி) மாணவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் -2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25%  இட ஓதுக்கீட்டில் சேர்ப்பதற்கு

1. சிறுபான்மையற்ற பள்ளிகள் தங்கள் பள்ளியில்  25% இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டிய நாள்: 25.08.2020

2. பெற்றோர்கள் இணையதள வழியாக விண்ணப்பிக்கும் நாட்கள் 27.08.2020 முதல் 25.09.2020 வரை

3. இலவச கல்வி 25    படி தகுதியுடைய மற்றும் தகுதியற்ற மாணவர்கள் விவரம் பள்ளி அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும் நாள்  30.09.2009

4. பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நாள். 01.10.2020 வரையாகும்,

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மற்றும் பிற வகுப்புகளில் பள்ளி மாறுதலில் வரும் மாணவர்களுக்கு புதிய மாணவர் சேர்க்கை செய்திட தலைமையாசிரியர்கள் தங்களில் அறிவிப்பு பலகையில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.  அந்த குறிப்பிட்ட நாளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளில் அரசாணை (நிலை) எண்,344, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DM-II) துறை, நாள் 10-07-2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப்  (SOP) பின்பற்றிட வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு  தொலைபேசி வாயிலாக பள்ளிக் கட்டணம் சார்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. 

அரசு விதிமுறைகளின்படி செயல்பட அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எந்தவகைப் பள்ளியாக இருந்தாலும் மாணவர்களுக்கான பள்ளிக்கட்டணம் செலுத்தும்போது அதற்குரிய இரசீதினை வழங்குமாறு பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியில் செலுத்தும் கட்டணத்திற்கு உரிய ரசீது பெறாமல் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என பெற்றோர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

அரசு விதிமுறைகளில் ஒரு பள்ளியில் உள்ள வகுப்புகளுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை  பள்ளி நிர்வாகம் பள்ளியின் தகவல்  பலகையில் தெளிவாக  அறிவிப்பு செய்திட வேண்டும்  என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.