.

Pages

Monday, August 17, 2020

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அதிராம்பட்டினம், ஆக.17
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர் சேர்க்கை இன்று (17-08-2020) திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

இதுகுறித்து பள்ளித்தலைமை ஆசிரியை மாலதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய சேர்க்கை இன்று (17-08-2020) முதல் நடைபெற்று வருகிறது.

கட்டணம் கிடையாது. புத்தகம், பை, நோட், வண்ண பென்சில்கள் மற்றும் கணித வடிவியல் பெட்டி அனைத்தும் இலவசமாக வழங்கபடுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு, கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் தொடர்புக்கு  
6369010428 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.