அதிரை நியூஸ்: ஆக.19
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தஞ்சாவூர், திருவையாறு, ஓரத்தநாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் 18 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020-2021-ம் ஆண்டு பயிற்சியில் சேர, இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர்-15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் போது மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஐ.டி.ஐ.-யில் சேருவோருக்கு மாதந்தோரும் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்களில் பயிற்சி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 04362-237054, 04362-262600, 04372-233442, 04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.