தஞ்சாவூரில் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து. காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்கவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 29 துறைகளைச் சேர்ந்த 149 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைத்தலைவர் ரூபேஷ் குமார் மீனா, காவல் துறை கண்காணிப்பாளர் தேஸ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெஸ்டின், முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பாலசந்திரன், வட்டாட்சியர் வெங்கடேஷன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தங்களது சொந்த வாகனத்தையும் தன்னலமற்று நோய் தொற்றுக்கு அஞ்சாமல் தனது குடும்பத்தை கூட பார்காமல் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் இஸ்லாமிய இயக்கங்களை நன்றி மறாந்த அரசு நிர்வாகம்.எப்போதுமே ஏமாந்து நிற்கும் முஸ்லீம் சமூகம்.
ReplyDelete