.

Pages

Monday, August 10, 2020

கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஆக.10
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (10.08.2020) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்புபணியில் சேவை மனப்பான்மையுடன் முன்களத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் அலுவலர்களின் ஆய்வுக்குப் பின்னர் கொரோனா நோயாளிகள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இணை நோய் உள்ளவர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படமாட்டாது.

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்கள் காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இருப்பின், அதுகுறித்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உரிய தகவல் தெரிவித்தபின் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களின் வாகனங்களில் அடுத்தவர் உதவி இல்லாமல் தானாகவே ஓட்டிச் சென்று சிகிச்சை பெறலாம். உடல்நிலை முடியாதவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே தயார் செய்திட முடியும். எனவே, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் (பொ) திரு.மணிவேலன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.