அதிரை நியூஸ்: ஆக.20
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வலைதளம் மற்றும் (SMS) குறுஞ்செய்தி மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கான RT-PCR பரிசோதனை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, இதுவரை 1,10,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சையை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய காலத்தில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்கள் பரிசோதனை முடிவுகளை எளிதாக பெற்று, உரிய காலத்தில் சிகிச்சையைப் பெற தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பொருட்டு www.covidtmctnj.com என்ற வலைத்தளம் 19.08.2020 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பரிசோதனை கொடுத்தவுடன் Specimen Referral Form (SRF ID)
குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிந்தவுடன் பரிசோதனை முடிவுகள் வலைதள முகவரி, குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த வலைதளத்தில் (SRF ID) அல்லது அலைபேசியில் உள்ளீடு செய்து, தங்கள் பரிசோதனை முடிவுகளை தாங்களே உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.