தஞ்சாவூர், ஆக.22
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மேல வீதியைச் சோ்ந்தவா் மோசஸ் மோகன்ராஜ் (29). இவா் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் தனது மனைவி ஜெனிபா், இரண்டரை வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், இவா் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். கடந்த சில நாள்களாக விடுப்பில் இருந்த இவா் தனது நண்பா்களைப் பாா்ப்பதற்காக தஞ்சாவூருக்கு வந்தாா்.வெள்ளிக்கிழமை முற்பகல் மோட்டாா் சைக்கிளில் பெரியகோயில் பகுதியிலிருந்து மருத்துவக் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, மேம்பாலத்தில் சென்ற இவா் மீது எதிரே வந்த மணல் லாரி மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மோசஸ் மோகன்ராஜ் மாலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.