.

Pages

Monday, August 17, 2020

அதிராம்பட்டினத்தில் இருவேறு இடங்களில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.17
பீச் சோஷியல் ஃபோரம் (BSF) அமைப்பின் சார்பில், கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி, ஈஸ்ட் கோஸ்ட் சாலை தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் பார்ட்ஸ் ஆகிய இரு வேறு இடங்களில் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் தலைவர் கே.முகமது சித்திக் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் டாக்டர் இ.அருண்குமார் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்து, கப சூரக் குடிநீர் அருந்துவதன் அவசியம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

பட்டுக்கோட்டை அருண் மருத்துவமனை ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் வி.பி அருண் பிரதாப் கலந்துகொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பொதுமக்களுக்கு 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' ஹோமியோபதி மருந்தை வழங்கினார்.

மேலும், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி, கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், அதிரை FM சமூகப் பண்பலை வானொலி நிலைய ஒருங்கிணைப்பாளர் கண்ணன், உமர், ஹாம் வானொலி இயக்குநர் தி.நமச்சிவாயம், எம்.ஜெ நாகேஸ்வரன், எம்.ஜெஹபர் சாதிக், எஸ்.ஜெஹபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பீச் சோஷியல் ஃபோரம் (BSF) அமைப்பினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.