நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் M. அஹமது தலைமை வகிக்க, லயன் சங்க மண்டல தலைவர் R. பாலசுந்தரம், வட்டார தலைவர் R. கோவிந்தராஜு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் மேஜர் S.P. கணபதி, S.M. முஹம்மது மொய்தீன், M. நெய்னா முஹம்மது, வளர்ச்சி தலைவர் S.A. அப்துல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இதில் தலைவராக M. சாகுல் ஹமீது, நிர்வாக செயலாளராக பேராசிரியர் N.M.I. அல்ஹாஜ், செயலராக ( சேவை ) M.I. நெய்னா முஹம்மது, பொருளாளராக N. ஆறுமுக சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.
முன்னதாக லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர் அவர்கள் வரவேற்புரையும், சென்ற ஆண்டில் லயன்ஸ் சங்கம் நிகழ்த்திய சாதனைகளையும் பட்டியலிட்டு கூறினார்
சிறப்பான சேவை செய்துவரும் சமூக ஆர்வலர்களுக்கு சேவை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவைக்காக நகர தமுமுக தலைவர் A.Rசாதிக் பாட்சா, அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பிரத பரிசோதனை சேவை செய்துவரும் திருநங்கை ஷில்பா, சமூக சேவையாற்றி வரும் புதுதெருவை சேர்ந்த இளைஞர் முஹம்மது ஆரிப், இணையதள சேவைக்காக சேக்கனா நிஜாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 10, 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுச்சென்றனர். இதில் முதல் தரத்தில் மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தலா ஆயிரம் ரூபாயை லயன்ஸ் சங்கத்தின் முதல்நிலை துணை தலைவர் N.U. ராமமூர்த்தி அவர்களின் சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். நிகழ்சிகள் அனைத்தையும் லயன்ஸ் சங்க தலைவர் M. அஹமது, செயலர் பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர், பொருளாளர் M. சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பத்திரிக்கையாளர்கள், சாதனை நிகழ்த்திய மாணவ மாணவிகள், பெற்றோர்கள் - ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅதிரை லயன்ஸ் கிளப் நிகழ்ச்சியில் சிறந்த பதிவாளர் விருது பெற்ற நிஜாம் காக்கா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDelete--முபீன்
அடி ஆத்தீ இங்க பாருடி, என்னடி எலி அம்மணத்தோடு ஓடுது. இவங்கதாண்டி சேக்கான்னா நிஜாம் காக்காவை அன்று மிரட்டிவிட்டு இன்று வாழ்த்துராணுக.
Deleteஅட கொங்க்கா மக்கா.
Valththukkal
ReplyDeletethuva vudan
manechudar. Savanna
அடி ஆத்தீ இங்க பாருடி, என்னடி எலி அம்மணத்தோடு ஓடுது. இவங்கதாண்டி சேக்கான்னா நிஜாம் காக்காவை அன்று மிரட்டிவிட்டு இன்று வாழ்த்துராணுக.
Deleteஅடியே, வாழ்த்துர ஸ்டைலே பாருடி.
அட கொங்க்கா மக்கா.
தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவைக்காக நகர தமுமுக தலைவர் நண்பர் A.Rசாதிக் பாட்சா அவர்கள் திறமையாக செயல்படுகிறார், மென்மேலும் பணி தொடரட்டும்.
ReplyDeleteகொவ்ரவவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.