குறிப்பு : ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரையின் சில மஹல்லா சங்கங்களுக்கு பைத்துல்மால் துபாய் கிளையின் சார்பில் கடந்த வருடம் 20-07-2013 அன்று அனுப்பப்பட்ட வேண்டுகோள் கடிதம்.
'அதிரை பைத்துல்மால் துபாய் கிளை நிர்வாகிகள், தலைமையக நிர்வாகிகளுடன் கடந்த வருடம் ரமளானில் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அமீரகத்தில் இயங்கும் அதிரை மஹல்லா சங்கங்களுக்கு மேற்படி வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது'
மீண்டும் நினைவூட்டும் விதமாக பொதுவில் பிரசுரிக்கப்படுகிறது.
இப்படிக்கு,
செயலர், அதிரை பைத்துல்மால்
துபை கிளை


ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு அங்குள்ள மக்கள் யாரும் ஜக்காத்தை வாங்க முன்வரவில்லை காரணம் கொடுப்பதை முறையாக கொடுத்ததும் அந்த ஜக்காத்தை பெற்று கொண்டவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்தி அந்த ஏழை மக்களும் தன்னிறைவு பெற்றதே அதற்க்கு காரணம் .
ReplyDeleteஇந்த அறிக்கைகளை அதிரை பைத்துல்மால் அறிவிப்பதற்கு முன்பே சில ஆண்டுகளாக நான் என்னுடைய கருத்தினை பலமுறை நமதூர் வலைதளங்களில் நமது தெருவாரியான சங்கங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து இருந்தேன் இதற்கு ஆதராவாகABM மற்றும் அதைசார்ந்த அமைப்பாளர்கள் கூட எனது கருத்தை அப்போது ஆதரிக்கவில்லை.
மேலும் மாற்று தெரு சகோதரர்களிடம் நான் ஒரு குறிப்பிட்ட முஹல்லாவை மட்டும் ஆதரிப்பதாக எனது அறிக்கைகளை சுட்டிக்காட்டி எனக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது.தற்போது ABM லே முன்வந்து இந்த அறிக்கையை வெளியிடுவதால் ஊரின் அனைத்து தெருக்களிலும் அதன் முஹல்லா சார்ந்த அதிரை பைத்துல்மால் கிளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் நமதூர் மக்களுக்கு ஏன் உதவக்கூடாது என்ற கேள்வியையும் முன்வைக்கின்றேன்
அப்துல் ஜலீல் காக்கா அவர்கள் என்கூட கனடாவில் இருந்த காலங்களில் நாங்கள் அதன் கிளைகளை உருவாக்காமலேயே அவர்கள் தலைமையில் பல நல்ல காரியங்களை செய்துவந்தோம்.
ஊரின் தெரு சங்கங்கள் போட்டிபோட்டு கொண்டு தர்ம சிந்தனையில் ஈடுபடுவது அல்லாஹ்விற்கு பொருத்தமான செயலே இருப்பினும் தொய்வில்லா பணிசெய்யும் ABM ன் கிளைகள் தெருவாரியாக உருவாக்கப்பட்டு பல சங்கங்களின் பொருளாதாரம் ஒரே வழியில் தர்மம் பகிர்ந்து அளிக்கபட்டால் அதுவே சிறந்தவழி .அல்லாஹ் நம்முடைய தர்மத்தை பொருந்தி கொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் .
அதிரை பைத்துல்மால் துபாய் கிளை நிர்வாகிகள், தலைமையக நிர்வாகிகளுடன் கடந்த வருடம் ரமளானில் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அமீரகத்தில் இயங்கும் அதிரை மஹல்லா சங்கங்களுக்கு மேற்படி வேண்டுகோள் அனுப்பப்பட்டது.
ReplyDeleteமஷ்வராவின் அடிப்படையில் பைத்துல்மால் சார்பில் அனுப்பப்பட்ட செய்தியின் தலைப்பை, தனிநபரின் கோரிக்கைபோல் திரித்து இருப்பதை ஆட்சேபிக்கிறேன்.
அல்லாஹ்வின் பொருத்தம்நாடி செய்யப்படும் செயல்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவது வருந்தத்தக்கது.
நம்நோக்கங்களுக்கும், செயல்களுக்கும் நற்கூலிதர அல்லாஹ் போதுமானவன்.
இப்படிக்கு,
N.ஜமாலுதீன்
ABM துபை கிளை செயலர்
அன்புச்சகோதரர் ஜமாலுத்தீன்,
ReplyDeleteஅதிரை பைத்துல்மால் - துபாய் என்ற மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு பதிவிடக்கோரி வந்த கடிதத்தில் 'இப்படிக்கு, செயலர்' என்று குறிப்பிட்டிருப்பதால் அவ்வாறு வைக்க நேரிட்டது.
தலைப்பில் 'அமீரக நிர்வாகியின்' என்றிருப்பதை 'அமீரக நிர்வாகிகளின்' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிரை நியூஸில் இடம்பெறும் செய்திகள் ஒவ்வொன்றும் ஊர் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காதளவிற்கு விருப்பு - வெறுப்பின்றி வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் எவ்வித உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என்பதை கூறிக்கொள்கிறோம்.
மேலும் ABM துபாய் கிளையின் செயலாளர் என்ற முறையில் நீங்கள் பின்னூட்டத்தில் பதிந்துள்ள 'அதிரை பைத்துல்மால் துபாய் கிளை நிர்வாகிகள், தலைமையக நிர்வாகிகளுடன் கடந்த வருடம் ரமளானில் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அமீரகத்தில் இயங்கும் அதிரை மஹல்லா சங்கங்களுக்கு மேற்படி வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது' என்ற வாசகங்கள் அடிக்குறிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி !