.

Pages

Saturday, July 12, 2014

பட்டுக்கோட்டை டி.எஸ்.பிக்கு பிடிவாரண்டு !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் செல்லப்பாண்டியன். இவர் கடந்த 2009–ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றினார். அப்போது வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆஜராகவில்லை.

கடந்த மாதம் 25–ந் தேதி இந்த வழக்கு விசாரணை நடந்த போதும் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் டி.எஸ்பி செல்லப்பாண்டியனை கைது செய்து ஆஜர் படுத்தும்படி நேற்று நாமக்கல் இரண்டாவது ஜூடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பிடிவாரண்டு நகலுடன் புதுச்சத்திரம் போலீசார் பட்டுக்கோட்டைக்கு விரைந்து உள்ளனர்.

1 comment:

  1. இருமுறை வராததற்கு பிடிவாரன்ட்டா ? இருநூறு முறை வராமல் இருப்பவரை பெங்களூரு நீதி்பதி் எதுவும் செய்யலயே. எங்களூரு நீதி்பதி்க்கு ஒரு நீதி் !? பெங்களூரு நீதி்பதி்க்கு ஒரு நீதி்யா !?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.