.

Pages

Monday, July 14, 2014

முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் !

முத்துப்பேட்டையில் சோசியல் டெமக்ராட்டிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் கொய்யா மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்திப் தலைமை வகித்தார். கிளை தலைவர் தீன் முகம்மது வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு பேசுகையில்: 
இந்திய அரசியலில் மே 24 ம் தேதிக்கு பிறகு நாட்டில் நடத்தர மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்பையும் மீறி பா.ஜ.க அரசு ஆட்சியை பிடித்து விட்டது. மனித லட்சனத்திற்கே தகுதி இல்லாத நரேந்திர மோடி இன்று இந்தியாவின் பரதமராகி விட்டார். இதற்கெல்லாம் மிக பெரிய சத்தியாக விளங்கிய ஊடகம் தான் காரணம். மேலும் நரேந்திர மோடி உழைப்பும் கொஞ்சம் இல்லை. ஒன்னறை வருடங்களில் 532 கூட்டங்களில் நரேந்திர மோடி பேசி இருக்கிரார். 3 லட்சத்துக்கு மேற்பட்ட மைல் தூரம் கடந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு உள்ளார். 80 கோடி மக்களை அவர் சந்தித்து உள்ளார். இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தலைவரும் செய்தது இல்லை. கடைசியில் கழுதைக்கு வாக்கப்பட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளளோம். நரேந்திர மோடி பிரதமரானால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நோபால் பரிசு பெற்ற அமரயசிங், எழுத்தாளர் ஆனந்த மூர்த்தி ஆகியோர் சொன்னார்கள். அந்த அளவிற்கு விரும்பத்தக்க மனிதர் நரேந்திரமோடி, அதனால் நாங்கள் நாட்டில் நடக்கும் அடக்கு முறைகளை கண்டு அஞ்ச மாட்டோம். அஞ்சாத இயக்கம் தான் எஸ்.டி.பி.ஐ என்பதை உணர்த்துவோம் இவர்களுக்கு வைக்கோ, விஜயக்காந்த், தமிழருவி மணியன் போன்றவர்கள் இடைதாரராக இருந்து சாதித்து விட்டனர். மொத்த்ததில் பா.ஜ.க வின் நரோந்திர மோடி பிரதமராகுவதை இந்த நாட்டின் யாராலும் தடுக்க முடியவில்லை என்றார்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் பேசுகையில்: 
சென்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியாவின் மிகபெரிய கட்சியாக நிகழ்கிறது. அரசியல் அதிகாரத்தை வைத்து கொண்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை எப்படியல்லாம் முடக்க பார்க்கிறது என்பதை நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். தற்பொழுது நாட்டில் பெரும்பான்மையாக சீட்டு பிடித்து ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு தங்களுக்கு சாதகமாகவும் மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கோம். 2004 ஆம் ஆண்டு மிக பெரிய வீழ்;ச்சியை அடைந்த பா.ஜ.க. குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தான் இதற்கு காரணம் என்று அன்றை பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி தான் இன்று கதாநாயகனாக ஆக்கி பிரதமராக்கி உள்ளனர். அது போல் அமித்ஷா போன்றவர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று அவர் பா.ஜ.கவின் தலைவர், பார்த்து கொள்ளுங்கள் செயல்பாட்டை, இந்தியாவின் சுதந்திரத்துக்கு பிறகு முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பிடுங்கப்பட்டவிட்டது. 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி நடந்த மும்பை குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை பாராபட்டசமாக பட்டுத்தி விட்டனர் என்றார்.

கூட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் சத்தார் உட்பட பலரும் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் முகம்மது யாசர், மீரா உசேன் சபீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை தலைவர் முகம்மது அசன் நன்றி கூறினார்.

படம் செய்தி:
முத்துப்பேட்டையில் சோசியல் டெமக்ராட்டிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது பேசினார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது மற்றும் பலர் உள்ளனர்.

'நிருபர்' மொய்தீன் பிச்சை


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.