தர்மசிந்தனை கொண்ட அதிரையர்களின் அடையாளமாக அதிரை பைத்துல்மால் தன்னிகரற்றச் சேவைகள் மூலம் தவிர்க்க முடியாத சேவை அமைப்பாகிப் போனது. அதிரை முஸ்லிம்களின் ஏழ்மை நிலைக்குத் தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்டாலும், இதன் சேவைகள் பிறமதத்தவர்களுக்கும் சென்றன.
பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் பேரூந்து கவிழ்ந்தபோது அடித்துச் செல்லப்பட்ட உயிர்களைக் காப்பாற்றிய வகையில் ஆற்றங்கரையிலிருந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைவரை அதிரை பைத்துல்மால் அவசர ஊர்தி சுமந்து சென்றது மட்டும் 30 தடவைக்கும் அதிகமான முறை என்றால் மலைக்காமல் இருக்க முடியுமா ?. 108 ஆம்புலன்ஸ் வசதியில்லாத காலத்தில் மட்டுமின்றி நள்ளிரவு, மழை என்று பாராமல் காலத்தினால் செய்த உதவியை மறக்க முடியுமா ?
2004 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஆழிப்பேரழை, அதிரையர்களின் மனங்களை மட்டும் உலுக்காமல் இருந்திருக்குமா என்ன ? அதிரையர்களின் பிறவி குணத்தின் அடையாளமாக அத்தியாவசியப் பொருட்களுடன் அதிரை பைத்துல்மால் நிவாரண குழு நாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்று செய்த உதவியால் சுனாமியேகூட வெட்கப்பட்டிருக்கும்.
இப்படியாக அதிரையிலிருந்து தொடங்கிய சேவைகள் அவ்வப்போது எல்லைதாண்டியும் சென்றதன் மூலம், மாவட்ட ஆட்சியரின் நன்மதிப்பையும் பெற்றது. கிராமப்புற சேவை அமைப்புக்கும் நோபல் பரிசு வழங்கலாம் என்றால் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத அதிரையில் செயல்படும் பைத்துல்மாலுக்கு பலமுறை விருது வழங்கி நோபல் அமைப்பு மேலும் பெருமையடைந்திருக்கும்!
அதிரை பைத்துல்மாலில் 21 ஆண்டுகால சேவைகளில் TOP - 10 சேவைகளின் விபரங்களை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
வ.எண்
|
சேவைகள்
|
நபர்கள்
|
தொகை (RsRs.)
|
1.
|
வட்டியில்லா கடன்
|
1455
|
1,30,00,000
|
2.
|
ஏழைக்குமர் திருமண உதவி
|
184
|
9,06,350
|
3.
|
இலவச மருத்துவ உதவி
|
210
|
4,45,350
|
4.
|
இலவச ஹத்னா
|
295
|
2,51,825
|
5.
|
கல்வி கட்டணம் மற்றும் இலவச சீருடை உதவி
|
3464
|
16,34,539
|
6.
|
மாதாந்திர முதியோர் ஓய்வூதியம்
2000ம் வருடம் முதல்
|
5146
|
20,60,560
|
7.
|
சிறு தொழில் முனைவோர்
|
91
|
4,74,125
|
8.
|
விதவை மறுவாழ்வுத் திட்டம்
|
90
|
1,95,000
|
9.
|
ஃபித்ரா பயனாளிகள்
(9725 மூட்டைகள் X 8 kGs)
|
77,800
|
19,33,000
|
10.
|
இலவச ஆம்புலன்ஸ்
|
45
|
63,400
|
ஈருலகிலும் நன்மை பயக்கும் திட்டங்களில் உங்கள் பங்களிப்பை ரமளானில் செய்து பன்மடங்கு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
வஸ்ஸலாம்,
அதிரை பைத்துல்மால்
துபாய் கிளை
சாதனை, சாதனை, சாதனை,
ReplyDeleteஅதிரை பைத்துல்மாலின் சாதனைகள் வளரட்டும், மக்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு சாதனைகள் பெருகட்டும். .