இந்நிலையில் நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிரை பேரூராட்சியின் கடற்கரைத்தெரு பகுதியில் 8வது வார்டு உறுப்பினர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் அவர்கள், இவர் வசிக்கும் பகுதியின் பொதுமக்களின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த வருடம் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தனது கோரிக்கையை புகாராக அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அப்போது விசாரணையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் நம்மிடம் கூறியதாவது...
'நமது ஊரில் விநியோகிக்கப்படும் காஸ் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதலாக ₹ 32 வசூல் செய்யபடுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பொதுமக்களிடம் கையொப்பம் மும்முரமாக பெறப்பட்டு வருகிறது.
இதுபோல் அதிரையின் ஏனைய வார்டு கவுன்சிலர்களும் தங்கள் பகுதி பொதுமக்களிடம் புகார்களை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தொடர்ந்து நடந்துவரும் முறைகேடுகளை தடுக்க முடியும்' என்றார்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
அதிரை இன்டேன் கேஸ் customer care மிக மிக அழச்சியபடுத்துவதையும் கண்டனம்மாக பதிவு செய்ய வேண்டும்.
ReplyDeleteஎத்துணை கவுன்சிலர்கள் நெட் தொடர்பில் தகவல் பெறுவார்கள் என்று நாம்யூகிக்க முடியவில்லை எனவே டெலிபோன் தொடர்புமூலம் தகவல் கொடுத்து இது போன்ற புகார் மனு அளிக்க அறிவுறுத்த வேண்டும்.
ReplyDeleteநம்மை ஏமாற்றாதவர்கள் யார்? ஒரு பிச்சைக்காரன் கை நீட்டினால் 'அட்வைஸ்' செய்யத் தொடங்கி விடுகிறோம். 'போப்பா... போய் உழைச்சுப் பிழைக்கிற வழியப்பாரு' என்று..!
ReplyDeleteஅதே ஒரு பாட்டி பழம் விற்றால் அந்த பாட்டியிடம் 'போட்டுக் கொடு...' என்று நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் ஒரு லாவணியே நடத்துகிறோம் ஆனால் இங்கோ கேட்டதைக் கொடுத்துவிட்டு போய்க் கொண்டே இருக்கிறோம்! கேட்பதற்கு ஆள் இல்லையென்று நினைத்து விட்டார்கள் போலும்! கேஷ் காரங்க இப்படி. சமீபத்தில் பாலில் கலப்படம் செய்து பெரிய கொள்ளை நடந்ததது மக்களுக்கு தெரியும் ஒரு தனிப்பட்ட மனிதன் சத்தியமா செய்யமுடியாது ஒரு பெரிய நெட்வொர்க், ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளது என்பதும் தெரியும் , யாராவது கண்டித்தோமா? பாலை வாங்காமல் இருந்தாலே ஆடிப்போய்விடுவார்கள், செய்தோமா ?
கேட்பதை கொடுப்பதால் தலைக்கனம் ஏறிப்போச்சு!
Well done boss
ReplyDelete