தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் உத்தரவின் பேரில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வழிகாட்டுதல் படி, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்கும் பணிகள் அதிரை பேரூராட்சி பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்யும் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆர் குமாரி, டி. ஸ்ரீநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் எஸ். சந்திர சேகரன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
டெங்கு கொசுவை கட்டுப்படுத்துவது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி. அறிவழகன் கூறும் போது...
'அதிரை பேரூராட்சி பகுதியில், பேரூராட்சி சார்பில் 10 தற்காலிக பணியாளர்கள் வீடு வீடாகச சென்று டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், குடிநீர் குழாய்களில் உடைப்பு மற்றும் குழிதோண்டி குடிநீரை பெறுபவர்களை கண்டறிந்து சுகாதார துறைக்கு தகவல் அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுய வைத்தியம் செய்துகொள்வது, அரசு பயிற்சி பெறாத மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.