அதிரை, மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இதில் விசைப்படகு, கண்ணாடி இழை படகுகள் போன்றவைகள் கள்ளிவயல்தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் இருந்து மீன்பிடிக்க செல்கின்றனர். சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி இறங்கு தளங்களில் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை உடனே மீட்க கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய மீனவர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று முதல் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதல் விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் விசைப்படகுகள் இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக ஏராளமான மீனவர்கள் வேலை இழப்பும் அதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.