.

Pages

Wednesday, November 12, 2014

முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2011ம் ஆண்டு, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தபோது, அந்நாட்டு கடற்படையிடம் பிடிபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட அவர்களிடம் போதைப்பொருள் இருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அவர்களுக்கு சமீபத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஐந்து போரையும் மீட்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று மாலை முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் எம். சம்சுதீன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின்மாநில பொது செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் எம். ராவுத்தர்ஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆர்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முகம்மது பைசல் நன்றி கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக - மமக நிர்வாகிகள் - மீனவர்கள் - பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



1 comment:

  1. இலங்கையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் மன்னிப்பு வழங்கவும், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, இரண்டு மூன்று நாட்களுக்குள், அவர்களை விடுவிக்கவும், அதிபர் ராஜபக் ஷே சம்மதம் தெரிவித்து உள்ளார்.

    இது ஓர் திட்டமிட்ட நாடகம், மீனவர்களிடமிருந்து எப்படியாவது நல்லபெயர் எடுக்க நினைத்து ஆடிய நாடகம் இது. உள்நோக்கம் உள்ளது இரண்டு நாட்டிலும் ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள் போல. மோடியின் அரசுக்கு இது ஓர் அவப்பெயர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.