.

Pages

Monday, November 3, 2014

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம் ! [ படங்கள் இணைப்பு ]

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டர், துபை அரசின் ரத்ததான மையத்துடன் இணைந்து 31.10.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சோனாப்பூர் பவர் குரூப் கேம்பில் நடத்தியது.

ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக ரத்தம் அத்தியாவசியத் தேவையாகிறது. இதற்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது இறை உவப்பிற்காக ரத்ததானம் செய்து வரும் அனைவரையும் பாராட்டினார்.

துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக துபை இந்தியன் கன்சுலேட்டின் கல்வி மற்றும் பொருளாதார கன்சுல் டாக்டர் திஜு தாமஸ், துபை அரசின் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் அத்தாரிட்டியின் அலுவலர் பழனி பாபு, துபை அரசின் ரத்ததான வங்கி மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப், துபை அரசின் மக்கள் தொடர்பு மேலாளர் முஹம்மது ஹனீஃப்,  சென்னை இலாஹி இண்டர்னேஷனல் நிர்வாக இயக்குநர் சையது முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை, நினைவுப் பரிசு மற்றும் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

பவர் குரூப் கேம்பில் ரத்ததானம் நிகழ்வினை நடத்துவதற்கு அனுமதி மற்றும் அனைத்து ஒத்துழைப்பினை வழங்கிய நிர்வாகத்தினர் கௌரவிக்கப்பட்டனர். பவர் குரூப் நிர்வாக இயக்குநரின் மகன் முஹம்மது ஹனீஃப்,  மனிதவளத்துறை மேலாளர் அப்துல் மாலிக், மக்கள் தொடர்பு அலுவலர் கஜினி முஹம்மது, பாதுகாப்பு அலுவலர் தேவராஜ்,  அனீஸ், உள்ளிட்டோர் பொன்னாடை, நினைவுப்பரிசு மற்றும் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

துபாய் மில்லியனியம் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் ஹார்டிக் சங்கர் தன்னார்வ பணியாளராக ரத்ததானம் செய்ய வருவோரை பதிவு செய்து சேவையாற்றினார். ஷார்ஜா இந்தியப் பள்ளியில் பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜயராகவனின் மகள்கள் ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த பதாகைகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

150 பேர் ரத்ததானம் செய்தனர்.

ஈமான் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா தலைமையில் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், திருச்சி ஃபைஜுர், மெல்கோ காதர், மைதீன், ஜமால், ஜாபர், இக்பால், தமீம், அப்துல் ரசாக், யாகூப், உஸ்மான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

பவர் குரூப், பிளாக் துளிப் பிளவர், அல் ரவாபி, பிரான் ஜுஸ், தினமலர், தட்ஸ் தமிழ், மணிச்சுடர் நாளிதழ், அதிரை நியூஸ், இனிய திசைகள் மாத இதழ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனுசரணை வழங்கின.

செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்









No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.