கடந்த மாதம் ஜாவியா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிரைக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களிடம் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை தெரு தர்ஹாவிற்கு சொந்தமான இடத்தை குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் கோரிக்கை மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் இன்று அதிரை கடற்கரைதெரு பகுதிக்கு வருகை தந்து, குடிநீர் தொட்டி அமைப்பதற்கு தேவைப்படும் இடம் குறித்து ஆய்வை மேற்கொண்டார்.
ஆய்வின் போது பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, 8வது வார்டு உறுப்பினர் சேனா மூனா, கடற்கரை தெரு ஜமாத்தார்கள், அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், அதிமுக பிரதிநிதி ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுபோன்று கூட்டு முயற்சி இருந்தால் சமுதாய தேவைக்கு பல வழிகள் பிறக்கும்
ReplyDelete