அப்பொழுது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில:
திருவாரூர் முதல் காரைக்குடி வரையில் உள்ள அகல ரயில்பாதை திட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வரையிலும் பணிகள் முடங்கி கிடப்பது குறித்து விரைவில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு விரைவில் டெல்லியில் ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற முயற்சி செய்யப்படும்.என்றவர் கருப்பு பணம் குறித்து ? என்று நிருபர்கள் கேள்வி கேட்டபோது அருகில் இருந்த மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்ததை பார்த்து 'இந்தபா கருப்பு உன் பணத்தை பற்றி கேக்குறாங்க' என்று கமெண்ட் அடித்தார் அனைவரும் சிரித்தனர்.
அதன்பின் கூறுகையில், நாட்டின் பணத்தை மறைமுகமாக எடுத்து சென்று அயல் நாட்டுகளில் பதுக்கி வைத்துருக்கும் கொள்ளகாரர்களிடமிருந்து கருப்பு பணத்தை மீட்போம் என்று நரேந்திர மோடி கூறியிருந்தார். அதன்படி 677 பேர்களின் பட்டியலை வெளியிட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் மற்ற நாடுகளில் மற்ற வங்கிகளிலும் உள்ள பணங்களும் மீட்டு அவர்களின் பெயர் பட்டியலும் வெளியாகும் என்று கூறியவர் கருப்பு பணம் விவகாரத்தில் சோனியா, ராகுல்காந்தி போன்ற காங்கிரசார் பெயரும் உள்ளது என்று சுப்ரமணியசாமி கூறுகிறாரே ? என்று ஒரு நிருபர் கேட்ட போது 'சுப்ரமணியசாமிக்கு தெரிந்தது எனக்கு தெரியாது' என்று சிரிப்புடன் தெரிவித்தார்.
பேட்டியின் போது பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் மாரிமுத்து, முன்னாள் செயலாளர் குமரவேல், கோட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் ராமலிங்கம் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை

மத்தியில் இவர்களின் ஆட்சிக்கு அமைந்த பிறகு தமிழக பிஜேபி காரர்களில் குரல் தொலைகாட்சிகளில் ஓங்கி ஒலிக்கிறது, RSS உடன் தங்களுக்கான தொடர்பை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். குரலில் ஒரு மெத்தனம், அகங்காரம் தெரிகிறது. ஜெயாவுக்கு கிடைத்த தண்டனை, திமுகவுக்கு கிடைக்கபோகும் தண்டனை இவர்களை ரொம்பவே பாதித்து இருக்கிறது.
ReplyDeleteமதவாத கட்சிகளையும் , ஜாதிவாரி கட்சிகளையும் தமிழக மக்கள் என்றுமே அங்கீகரித்ததில்லை என்பது தமிழக பி.ஜே.பி.யினருக்கு தெரியாமல் இல்லை. 2016 யில் இவர்கள் தான் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று இப்போதே கனவு காண தொடங்கிவிட்டார்கள். அடடா கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு.....