.

Pages

Thursday, November 13, 2014

முத்துப்பேட்டையில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் பீதி !

முத்துப்பேட்டை நகரம் ஒரு பதற்றம் நிறைந்த பகுதியாகும். அதனால் முத்துப்பேட்டை நகரம் இரவும் பகலும் பாறாமல் எந்த நேரமும் தீவிர கண்காணிப்பில் காவல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும். சமீப காலமாக மிகவும் அமைதியான சூழ்நிலையில் காணப்படுவதால் காவல் துறை பாதுகாப்பு வாபேஸ் பெறப்பட்டு பொதுமக்கள் சகஜ நிலையில் உள்ளனர். தற்பொழுது இப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது. இதில் குறிப்பாக கடந்த 2-ந் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் லாரி டிரைவரை தாக்கி ஒரு கும்பல் பணம் பறித்த செயல,; 5-ந் தேதி அ.தி.மு.க பிரமுகர் யானை காலிது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் காணமல் போன சம்பவம், 6-ந் தேதி ஜாம்புவானோடை தர்ஹாவில் கேரளா தம்பதினர் அப்துல்லா குட்டி, ஹதீஜா ஆகியோருக்கு மயக்க மருந்து கொடுத்து நூதன முறை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், 8-ம் தேதி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் சீட்டு கவர் கடையில் பட்டபகலில் 33 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆகிய பெரிய சம்பவங்கள் முதல் 10-ந் தேதி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனேசன் என்பவரது ஹோட்டலில் புரோட்டா கல்லை திருடிய சிறிய சம்பவம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்துக்குள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக முத்துப்பேட்டை நகரில் பெருகி விட்டன. அதனால் யாரைப் பார்த்தாலும் பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில் முத்துப்பேட்டை பொது மக்கள் தல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டுகளில் சிறிய கொள்ளை சம்பவங்களை தவிர பெரிய சம்பவங்களான வங்கி வாசலில் வாடிக்கையாளரின் பணத்தைத் துணிச்சலாக பட்ட பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளது. இதுநாள் வரை குற்றவாளிகள் கைது செய்ய படவில்லை என்பதால் காவல் துறை மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை நகரில் சமீப காலமாக சுற்றித்திரியும் ஆடு மாடு போன்ற கால்நடைகளை ஒரு கும்பல் அடிக்கடி திருடி லாரிகளில் கடத்திவரும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பொது மக்களை மேலும் பீதி அடைய வைத்துள்ளது.

செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை, 
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.