.

Pages

Sunday, November 23, 2014

கடற்கரை தெரு கந்தூரி - நேரடி ரிப்போர்ட் !

அதிரையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி மற்றும் கடற்கரைதெரு தர்ஹாக்களில் வருடந்தோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இவற்றை அதிரையில் வாழுகின்ற ஒரு சாரார் ஆதரிப்பதும் மற்றொரு சாரார் கடுமையாக எதிர்த்து வருவதுமாக இருந்துவரும். இதுதொடர்பாக அதிரையில் வாழுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ அல்லது பொதுமக்களிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.

கடந்த சில வருடங்களாக ஊரில் நடக்கும் கந்தூரி விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இயங்கிவரும் தவ்ஹீத் அமைப்புகள் அவ்வப்போது துண்டு பிரசுரங்களும், தெருமுனை பிராசாரங்களும், பொதுக்கூட்டங்கள், கந்தூரி விழாவிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டைகளும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குதல், கந்தூரி விழாவின்போது விநியோகிக்கும் மின்சாரத்தை தடை ஏற்படுத்தாமல் இருக்க மின்சார வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட தங்கள் தரப்பு எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியின் இமாம், துபாயில் செயல்படும் கடற்கரைதெரு அமீரக அமைப்பு ஆகியோரும் கந்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மாலை கடற்கரைதெரு தர்ஹாவின் கந்தூரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கடந்த முறை கூடுதலான உருப்படிகளுடன் நகரை வலம்வந்த ஊர்வலம் இம்முறை குறைவாகவே காணப்பட்டது. அதேபோல் அதிகமான வெடிகளும் வெடிக்கப்பட வில்லை.

முன்னதாக பட்டுக்கோட்டையில் கோட்டாசியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளை, ADT அமைப்பு, கந்தூரி விழா கமிட்டி ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டது. இதில் கந்தூரி விழா கமிட்டியினரும், ADT அமைப்பினரும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேலத்தெரு அல்பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளிவாசல் வழியாகவும், நடுத்தெரு, புதுமனைதெரு, சிஎம்பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லவில்லை.

அதேபோல் ஊர்வலத்தின் போது கடந்த முறைபோல், இந்த முறையும் நகரில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது. ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமங்களும் நடைபெறாமல் தடுக்க அதிரை நகர காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே முக்கிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

20 comments:

  1. சூப்பர், கூடின் சைஸ் ரொம்ப குறைந்துபோட்சே அப்போ அவருக்கு வருமானம் குறைந்து இருக்குமே! பண்ணா மீனு அருமை,

    ReplyDelete
  2. தவ்கீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடன் கடற்க்கரை பள்ளிவாசல் இமாம் இவர்கள் எல்லாம் வஹ்ஹாபிகள். வஹ்ஹாபிகள் சுன்னத் ஜமாத்தினர்களுக்கு தொந்திரவு செய்வதற்கு என்றே அல்லும் பகலும் சிந்திக்கின்றனர். அவர்கள் கொள் கையில் அடுத்தவர்களை மனம் வருத்தம் செய்வது முக்கியக்கடமை. பொது மக்கள் வஹ்ஹாபியின் இனம் நிறம் தெரியாமல் அவர்களின் வேஷங்களில் குழம்பிப் போகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. வஹாபி என்றால் என்ன என்ற அற்த்தம் தெரியாத கூமுட்டைக்கு வஹாபியை விமர்சிக்க அருகதை இல்லை.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சியா முஸ்லிம் parrthu en vaimudi irukeenga.

      Delete
    2. ஏன்? ஜப்பானில் ஒரு தர்கா கட்ட வேண்டியதுதானே.

      Delete
    3. ஜப்பான்லே நல்ல வசூல் கிடைக்கும் என்று கனவு கண்டேன்.

      Delete
  4. கழுதை தேய்ந்து எங்கே கட்டெறும்பானது ? ஒரு இடத்தில் அடங்கியிருந்தால் அவர்கள் செயலை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ? உங்கள் நிலை வேறு அவர்கள் நிலை வேறு. எதற்கு வம்புகள் ? அவரவர் வழி அவரவர்க்கு. தானும் பிறரும் அமைதியாக வாழ்பவன் தான் முஸ்லிம் என்பதை ஏனோ பலர் ஏற்பதில்லை.

    மேலும் இஸ்லாமிய நெறிமுறைகள் அதற்கு உட்பட்டு இறை நெருக்கத்தைப் பெற்றவர்கள் அவர்களை தனக்கு சமமாக பெயர் கூறி அழைப்பதில் ஏனோ ஒரு இனம் தெரியாத சந்தோசம் சிலருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் நிலை வேறு என்று கூறும் உங்களுக்கு எங்கிறுந்து வகிச்செய்தி வந்தது.

      இல்லாத ஒரு விழாவை சப்பைக் கட்டிக்கொண்டு செய்கின்ற உங்களுக்கு இருக்கின்ற எத்தனையோ சுன்னத்தான நல்ல அமல்கமள் தென்படுவதும்மில்லை எதிர்கவும் செய்கிறீர்கள் இனையும் வைக்க துணிந்துவிட்டதும்மல்லாமல் தாண்டவும் செய்கின்றீர்கள் உங்கள் நிலை என்ன?

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ‎500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கந்தூரி வைபவம் நடந்து கொண்டு ‎வருகிறது. இதை யாராரும் ஒழிக்கவே முடியாது, அனாச்சாரம் என்றால் ‎ஊரில் என்னென்னமோ அனாசாரம் நடக்குது, அதுவெல்லாம் உங்களின் ‎பார்வைக்கு வராதா? அடுத்து கோட்டைப்பட்டினம் கந்தூரி, அங்கு போய் ‎உங்களின் எதிர்ப்பை காட்ட முடியுமா?‎

    கந்தூரி ஊர்வலத்திலே பன்னாமீனு ரொம்ப ஸ்டைலாக இருந்ததாக ‎எல்லோரும் சொன்னாங்க. மறு வருஷம் வரைக்கும் நாறாமல் அப்படியே ‎இருக்குமாம்.‎

    ReplyDelete
    Replies
    1. சியா முஸ்லிம் parrthu en vaimudi irukeenga.

      Delete
    2. என்ன சியா முஸ்லிம்?
      enna siyaa muslum?
      إن سعيا مسلم؟
      एन्ना सिया मुस्लिम?
      എന്നാ സിയാ മുസ്ലിം?
      انا سیا مسلم؟

      Delete
  7. Please don't insult the Alim and Ulama , Mr Ahamed Anas I ask question to u, what is meaning of wahhabi?

    ReplyDelete
    Replies
    1. Aj.mohideenNovember 24, 2014 at 6:54 AM
      வஹாபி என்றால் என்ன என்ற அற்த்தம் தெரியாத கூமுட்டைக்கு வஹாபியை விமர்சிக்க அருகதை இல்லை.//

      இப்படித்தான் இவர்கள் எழுதுவார்கள். கொள்கையைப் பற்றி எழுதவில்லை என்று தோன்றும். எந்தக் கொள்கை மனதில் உள்ளதோ அதன் பொருட்டால்தான் இந்த மாதரி வார்த்தைகள் வெளிவரும். எனவே வஹ்ஹாபிகள் என்பதற்கு அவர்கள் பேசும் மதிக்கும் முறைகளை வைத்தே புரிந்துக்கொள்ளுங்கள். காரணம் வஹ்ஹாபி என்று வஹ்ஹாபிகள் வெளியில் தன்னை பிரகடனப்படுத்தமாட்டார்கள்.

      Delete
  8. Nalla vishayangalai paarattuvadhu pol theeya seyalgalai kandikka vendumma illaya enandral nanmayai eavi theemayai thadukkindra koottamaaga irukkindrom alhamdulillah.

    ReplyDelete
  9. 1. Kanthuriyea ethirkkum evargal ...evanga veettil TV ellai endru solla sollunga paarppom ?
    2. TV yil avalavu anacharangal varuthu ,Kanthurilnal Yaaru kettupona endru sollunga paa?
    3. Muthalil sollubavargal sariya erukkanum appramthaan mattravangalai thiruthanum paa....

    ReplyDelete
    Replies
    1. இச் இச் இச்சு கொடு பிச் பிச்சு கொடு ரைட்டா ரைட்டு... முகம்சுளிக்காமல் டிவி பார்ப்பார்களே அதெல்லாம் தெரியாது இவங்களுக்கு ..

      Delete
  10. ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.