.

Pages

Wednesday, November 12, 2014

துபாயில் கோலாகலமாக துவங்கியது நவீன போக்குவரத்து சேவை ! [ படங்கள் இணைப்பு ]

துபாயில் பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் நவீன‌ டிராம் வண்டிகளின் சேவை நேற்று முதல் கோலாகலமாக துவங்கியது.

முதல் போக்குவரத்தை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு டிராம் வண்டியில் பயணம் செய்தனர். துவக்க விழாவை முன்னிட்டு கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வழித்தடத்தில் மொத்தம் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

துபாய் வரலாற்றில் முதல் முறையாக அதி நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு இந்த வாகனம் 44 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த டிராம் வாகனம் சராசரியாக மணிக்கு 21.44 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 405 பயணிகள் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு காலை 5.30லிருந்து நள்ளிரவு 12 மணிவரை இயக்கபட உள்ளது. மேலும் ப‌டி படியாக 14.5 கிலோமீட்டார் தூரம் வரை ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டிராம் வண்டியில் ஏழு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு கோல்ட் சூட், நான்கு பெட்டிகள் சில்வர் கிளாஸ் என்ற இரண்டு வகுப்புகளுடன், இரண்டு பெட்டிகள் குழந்தைகள் மகளிருக்கென தனி வகுப்பும் இதில் இருக்கும். வண்டிகளின் உட்புறங்களும், நிறுத்தங்களும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு பயணிகளை கவரும் வகையில் டிராம் அமைந்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit : Gulfnews / Khaleejtimes

6 comments:

  1. Masha Allah. That's called spirit of nation.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பாராட்டப்படவேண்டிய முயற்சி, இதுபோல் துபாயிலிருந்து அதிரைக்கு ‎கடலுக்கு அடியில் ஒரு இரயில் பாதையை அமைத்து இரயிலை ஓரட்ச் ‎செய்தால் இன்னும் பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. முதலில் இரயில், சென்னை முதல் அதிரை வர பாடுபடுவோம்

      Delete
    2. துபாய் முதல் அதிரை வரை வந்தாலும் வருமே தவிர, சென்னை முதல் அதிரை வரை வரவே வராது.

      Delete
    3. சரியாக சொன்னீர்கள்

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.