.

Pages

Friday, November 7, 2014

கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை !

கடைமடை பகுதிக்கு முறைவைக்காமல் தண்ணீர் விடவேண்டும். விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூர் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கூர் ஒன்றிய 11-வது மாநாடு, மதுக்கூர் முக்கூட்டுச்சாலை கே.கே.ஷாப்பிங் மகாலில் ஆலத்தூர் ஏ.கே.சுப்பிரமணியம் நினைவரங்கில் வியாழன் அன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் கே.லெட்சுமணன் மாநாட்டு கொடியேற்றினார். வை.சிதம்பரம், எஸ்.ரெத்தினம், ஆர்.நாகநாதன் தலைமை வகித்தனர். ஏ.எம்.வேதாசலம் வரவேற்றார். கே.கோவிந்தராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரமேஷ் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச்செயலாளர் ஆர்.காசிநாதன் வேலை அறிக்கை வாசித்தார்.எஸ்.தங்கவேல், எம் முருகேசன், எல்.முருகவேல், ஆர்.சாந்தி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
     
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு மாநாட்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் ஒன்றியச்செயலாளராக மீண்டும் ப.காசிநாதன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆர்.காசிநாதன், ஏ.எம்.வேதாசலம், வை.சிதம்பரம், எஸ்.ரெத்தினம், எஸ்.தங்கவேல், கே.கோவிந்தராஜ், எம்.அய்யநாதன், கே.லெட்சுமணன், வி.ஆறுமுகம் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக்குழுவும்  தேர்வு  செய்யப்பட்டனர். எம்.அய்யநாதன் நன்றி கூறினார்.
 
103 மாநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட    இம்மாநாட்டில், " பால்விலை உயர்வு, உத்தேச மின்கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். ஏறிவரும் விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இலங்கையில் மரணதண்டணை விதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். கடைமடை பகுதியான மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கிளை வாய்க்கால்களில் பாசனத்திற்கு முறை வைக்காமல் தண்ணீர் விடவேண்டும். கூட்டுறவு சொசைட்டிகளில் மானியத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதுக்கால்வாய் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் . அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதுக்கூர் ஒன்றியத்தின் பாசன ஏரிகள், குளங்கள்,

வாய்க்கால்களை தூர்வாரி, காட்டாமணக்கு, கருவேல மரங்களை அகற்றி மராமத்து செய்து தரவேண்டும். மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்திடவேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலைநாட்களை 200 நாட்களாகவும், கூலியை 250 ரூபாயாகவும் உயர்த்தி தரவேண்டும். தமிழகத்தில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், தீண்டாமைக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். ஆலைத் தொழிலாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்: 
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.