.

Pages

Thursday, January 8, 2015

அதிரையில் அதிசயம்: 1 கிலோ கோழிக்கறி ₹ 90 க்கு விற்பனை !

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கோழி இறைச்சி ₹ 160 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிசயமாக  ₹ 90 க்கு விற்பனை செய்யப்படுகிது. விலை மலிவாக கிடைக்கும் கோழி இறைச்சியை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலத்தெரு குட்டி மாமா கடை அருகே அமைந்துள்ள நசுருதீன் கோழிக் கடையில் விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர் 'சின்னவன்' என்கிற சேக் நசுருதீனிடம் நம்மிடம் கூறுகையில்...
"அதிரையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி  ₹ 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற நோக்கில் முயற்சித்து வருகின்றோம். மேலும் நாங்கள் கோழிப்பண்ணைகளுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகின்றது.

இன்று காலை துவங்கிய விற்பனையில் அதிரையின் பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து கோழி இறைச்சியை மனநிறைவோடு வாங்கிச் செல்கின்றனர்.  பண்ணையிலிருந்து ஆரோக்கியமான கோழிகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டுள்ளோம். ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம்." என்கிறார்.

டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து கொடுக்கின்றனர். நாமும் நமது பங்குக்கு இரண்டு கிலோ கோழி இறைச்சியை ஆர்டர் செய்துவிட்டு, அந்த இளைஞரின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
தொடர்புக்கு : 9965240616

3 comments:

  1. கோழிகறி கடை காரரே ஏதும் சீக்கு வராமல் பார்த்து கொள்ளுங்கள் .அல்லா உங்கள் தொழிலில் பரகத் செய்வான்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கோழிக்கறியை சில பேர் சாப்பிடுவாங்க, பல பேர் சாப்பிடமாட்டாங்க. ‎ஆனா,எல்லோரும் விரும்பும் தங்கம் ஒரு கிராம் ஒரு ரூபாய்க்கு விற்க ‎வரும் நாள் என்னாலோ???!!‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.