.

Pages

Thursday, January 8, 2015

துபாய்க்கு சென்ற கணவர் கோமா நிலையில் பாதிப்பு: மீட்டு தர மனைவி மனு !

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஜெ.ஜான்மேரி கண்ணீர் மல்க கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கடந்த 22 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம், என்.கே.சாலை பாரதிநகரில் வசித்து வருகிறேன். எனது கணவர் ஜி.ஜெயராஜ் (வயது 48). அவர் கடந்த 11 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார். தான் பணியாற்றி வந்த கம்பெனியில் (குரூப் 4 செக்யூரிட்டிஸ்) தற்போது வேலையில் இருந்து நின்றுவிட்டார்.

எனவே, தான் பணியாற்றிய காலத்துக்கான பி.எப். போன்ற பணப்பயன்களைக் கேட்டு அந்த கம்பெனியிடம் மனு கொடுத்தார். ஆனால், அந்த பணத்தை தர கம்பெனி மறுத்துவிட்டது. எனவே அந்த கம்பெனி மீது ஜெயராஜ் புகார் மனு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து அந்த புகார் கோர்ட்டுக்கு சென்றது. அங்கு அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால் அவர் உடனே இந்தியாவுக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில், எனது கணவர் ஜெயராஜ் கோமா நிலையில் அங்குள்ள குவைத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது நண்பர் என்னிடம் தகவல் கூறினார்.

அவரது உடல்நிலையை அறிந்து அவரை காப்பாற்ற எங்களால் முடியவில்லை. எனவே, அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து இங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஏற்றவகையில் நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.