அமெரிக்காவில் பேட்டரியை விழுங்கிய சிறுவன் ஒருவன் நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது பேசத் தொடங்கியுள்ளான். அமெரிக்காவின் அரிசோனா(Arizona) மாநிலத்தின் உள்ள பியோரியா(Peoria) நகரத்தில் எம்மெட் ராச்(Emmett Rauch Age-5) என்ற சிறுவன் தவழும் குழந்தையாக இருக்கும் போது டிவிடி ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளான்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்மெட்டை, பரிசோதித்த மருத்துவர்கள் உணவுக்குழாயில் பேட்டரி சிக்கிக் கொண்டதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால் தொண்டையில் சிறு துளையிட்டு குழாய் மூலம் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டு வயதிற்குள்ளே 200 முறை எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எம்மெட்டுக்கு, இதுவரை 65 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆசிட்டால் எரிந்து போன நான்கு அங்குலம் நீளமுள்ள உணவுக்குழாய் நீக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த எம்மெட், நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இயற்கையாக மூச்சுவிடவும், பேசவும் தொடங்கியிருக்கிறான்.
தங்களது அலட்சியத்தால் மகனுக்கு நேர்ந்த நிலைமையை நினைத்து வருந்திய அவனது பெற்றோர் தற்போது தங்கள் குற்ற உணர்விலிருந்து மீண்டு பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.