.

Pages

Monday, January 5, 2015

சாதனை வீரர் முஹமது யாசீன் அதிரையில் கட்டிவரும் புதிய பள்ளிவாசல்!

இன்று கூட்டத்தில் ஒர் முகமாய் மறைந்திருந்தாலும் அதிரைக்கு பெருமை சேர்க்கும் பல விளையாட்டுச் சாதனைகளின் சொந்தக்காரர் நமதூர் மேலத்தெருவை சேர்ந்த செய்யது முகமது ஹாஜியார் அவர்களின் பேரனும் முகமது மீராசா அவர்களின் மகனுமான முஹமது யாசீன் அவர்கள்.

இன்று ஓர் ஆஸ்திரேலிய குடிமகனாக திகழ்ந்தாலும் 80களில் கும்பகோணம் அல் அமீன் பள்ளியில் படித்த காலத்திலும், திருச்சியில் பட்டப்படிப்பு படித்த காலத்திலும், அதிரையிலும் பல விளையாட்டுகளிலும் ஏக காலத்தில் சிறந்து விளங்கியவர். குறிப்பாக, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து, ரிங்பால் என அனைத்திலும் கலக்கியதோடு உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற போட்டிகளிலும் இந்திய அளவில் சாதனைகளை படைத்தவர்.

பன்முக திறமையுடைய இவருடைய விளையாட்டு சாதனைகளை நினைவுகூர்வது கண்டிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்.

1. அகில இந்திய அளவில் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையில் தஞ்சாவூரில் நடைபெற்ற குண்டு ஏறிதல் போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இந்த சாதனை அன்றைய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தியில் பலமுறை காண்பிக்கப்பட்டது. அன்றைக்கு DD மட்டும் தான் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

2. பாரதிதாசன் பல்கலைகழக அளவில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார்.

3. கேரள மாநிலம் கோட்டயத்தில் இந்திய அளவில் அனைத்து பல்கலைக்கழக அணிகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.

4. தமிழக பள்ளிகளுக்கிடையில் நடைபெறும் வட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களுக்குள் பலமுறை வந்துள்ளார்.

5. அதிரையில் செயல்பட்ட நூருல் ஹசன் நினைவு அணி மற்றும் WCC ஆகிய கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்து தனது அணியை பலமுறை வெற்றிபெற வைத்துள்ளார்.

6. இன்று 40 வயதை பூர்த்தி செய்துள்ள நிலையிலும் ஆஸ்திரேலிய சிட்னி கிரிக்கெட் கிளப்பிற்கு உட்பட்ட சவுத் சிட்னி 'B' அணியில் வீரராக இடம்பெற்று இன்றும் துடிப்புடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி விசயத்திற்கு வருவோம்

முஹமது யாசீன் அவர்கள் விளையாட்டில் மட்டுமல்ல இஸ்லாமிய அற நெறிகளிலும் சிறந்து விளங்குவது கண்டிப்பாக போற்றத்தக்கதே!

மேலத்தெரு சாணா வயல் பகுதியில் கடந்த முறை ஊருக்கு வந்திருந்தபோது ஒரு பள்ளிவாசலை கட்ட வேண்டும் என்ற நிய்யத்தில் வாங்கிப் போட்ட நிலத்தில் இந்த முறை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முஸல்லா எனும் தொழுகை கூடத்தை தனது சொந்த செலவில் கட்டி வருகிறார் மேலும் வரும் ரமலான் மாதம் முதல் செயல்பட துவங்கும் இன்ஷா அல்லாஹ். {ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் தொழுகை நடைபெற்று வரும் மைதானத்தின் நேர் பின்புறம் உள்ளது}

கடந்த வருடம் புனித ஹஜ்ஜை முடித்துள்ள முஹமது யாசீன் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றுவதில் ஆர்வமுள்ள தனது 9 வயது மகனை ஒர் தாயியாக வளர்க்க ஆசைபடுகிறார்.

அல்லாஹ் சகோதரர் முஹமது யாசீன் அவர்களின் தூய பணிகளை ஏற்று மறுமையில் அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நற்கூலிகளை வழங்குவானாக! என அனைவரும் இறைஞ்சுவோம்.

நினைவும் சந்திப்பும்
அதிரை அமீன்
புதிதாக கட்டி வரும் பள்ளிவாசலின் தோற்றம் 

19 comments:

  1. Nam uril etthanaiyo panakkarargal erukkirargal avargal evarukkum intha nalla manasu ellai athuvum evalavu siriya vayathil Palli kattikkodukkirar ...Yasin kaka oru eduthukkattu mattravargalukku ....Ellam valla Allahuvidam Naam Yasin kakavukku Dua seivom...

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்....கேட்பதற்க்கு மகிழ்ச்சியளிக்கிறது...அல்ஹம்துலில்லாஹ்...

    சகோ. யாஸீன் மாதிரி எத்தனை நபர்களோ இருகின்றனர் தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், நமக்கு இச்செய்தியின் வாயிலாகத்தானே தெரிய வருகிறது.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எங்கள் அணியின் முன்னாள் கேப்டன் யாசின் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் அல்லா அவர்களுக்கு மறுமையில் ஒரு பள்ளியை கட்டுவநாக ஆமீன்

    ReplyDelete
  5. Masha Allah Allah will accept his Sathakkatul jariya

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    தம்பி முஹமது யாசீன் அவர்கள் எனக்கு அவ்வளவாக தெரியாவிட்டாலும், ‎அவர் எடுத்து இருக்கும் இந்த முடிவுக்கு அவரை பாராட்டாமல் இருக்க ‎முடியாது.‎

    இது போல் பல சாதனை படிகளை கடக்க நீங்கள் ஆயத்தப்பட்டிருப்பது நம் ‎சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்ல முடியும். ‎இதெற்கெல்லாம் மேலாக எல்லாம் வல்ல நாயனின் கிருபையும் பரகத்தும் ‎உங்களூடேனேயே இருப்பதாக ---- ஆமீன்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  7. ஆஸ்திரேலிய பிரஜையானாலும் சொந்த மண்ணை மறவாது விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் பொதுச் சேவைசெய்வதுடன் முக்கியமாக சானா வயலுக்கு என தொழுகைப் பள்ளி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் பள்ளிவாசல் கட்ட பணியைத் தொடங்கி இருப்பது மனதிற்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது. சகோதரர் யாசின் அவர்கள் நலமுடன் இருந்து இன்னும் பல பொதுநல காரியங்களை சிறப்புடன் செய்ய துவா செய்வோம். அவர்களுடைய இந்த சேவைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போமாக.!

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  9. Masha Allah, May Allah accept his all good deeds

    ReplyDelete
  10. இறைவன் ஆசியுடன் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இறைவன் ஆசியுடன் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சகோதரர் யாசீன் அவர்கள் கும்பகோணம் அல் அமீன் பள்ளியில் படிக்கும் போதே ஒரு நல்ல விளையாட்டு வீரராக இருந்து வந்தவர். இவர் எனக்கு சீனியராக இருந்தவர் மாவட்டத்திலேயை முதல் இடைத்தை பிடித்தவர் குண்டு எறிதல் போட்டியில். இந்த பள்ளிவாசலை கட்ட எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாகவும் ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.