.

Pages

Monday, January 12, 2015

அதிரை கடலோரப் பகுதியில் போலீசார் திடீர் சோதனை !

தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிரை கடலோரப்பகுதிகளில் தஞ்சை மாவட்ட கடலோரப் பாதுகாப்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில், அதிரை கடலோரப் பாதுகாப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார், ரவி, கடலோரப் பாதுகாப்பு காவலர் ஆசைதம்பி ஆகியோர் ஏரிபுறக்கரை மீன் பிடி துறைமுகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய மீனவர்களிடம் தடைசெய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக கடல் நட்சத்திர ஆமை, கடல் அட்டை, சங்கு, கடல் குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் பிடிபட்டுள்ளதா ? என படகுகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தேகப்படும்படியான படகுகள் கடல் பகுதியில் சுற்றித்திரிகிறதா என நவீன பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.

தஞ்சை மாவட்ட கடலோரப் பாதுகாப்பு காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் ஏரிப்புறக்கரை மீனவர்களிடம் பேசுகையில்..
மீனவர்கள் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல்பசு, கடல் நட்சத்திர ஆமை, கடல்சங்கு உள்ளிட்ட 52 வகையான கடற்வாழ் உயிரினங்களை பிடிக்கக்கூடாது. மீனவர்கள் லைப் ஜாக்கெட் அணிவது அவசியம். அதுதான் உயிருக்கு பாதுகாப்பு. மேலும் சந்தேகப்படும்படியான படகுகள் கடல் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் கொடுக்கவும். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை, அலைப்பேசி எடுத்து செல்ல வேண்டும். கடற்கரை பகுதிகளிலோ, கடலிலோ அறிமுகம் இல்லாத நபர்கள், படகுகள் தென்பட்டால் உடனடியாக 1093 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.

அப்போது  அதிரை கடலோரப் பாதுகாப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார், ரவி, கடலோரப் பாதுகாப்பு காவலர் ஆசைதம்பி, ஏரிபுறக்கரை கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் முருகேஷன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.