ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் ஆடிட்டோரியத்தில் 16.01.2015 வெள்ளிக்கிழமை இரவு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கும் விதமாக இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம்(IFF - JEDDAH)தமிழ் பிரிவு சார்பில் 'நபிகளாரை நேசிப்போம்' நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் தமிழ்ப்பிரிவு தலைவர் கே.ஏ.எம்.ஷரீஃப் அவர்கள் நபிகளாரின் சிறப்புகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மேலும் ஜித்தாவில் வாழும் தமிழக அளவிலான மாணவ, மாணவிகளுக்கு நபிகளாரின் சிறப்புகள் குறித்து 'ஹுப்புன் நபி' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கேள்வி - பதில் எழுத்துப் போட்டியில் அதிரை ஆஸ்பத்திரித் தெருவைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி அவர்களின் மகள் தன்ஷீரா இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றார். மேடையில் தன்சீரா சார்பில் அவரது தகப்பனார் தமீம் அன்சாரி பரிசையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.
சுமார் 75 க்கும் அதிகமான மாணவ மாணவியர் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏராளமான அதிரை மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஜித்தா வாழ் அதிரை மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





மாஷா அல்லாஹ் ...வாழ்த்துக்கள் மச்சான் ..
ReplyDelete