இப்போட்டியில் வெற்றிப்பெற்ற மற்றும் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் நேற்றையதினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் கூறுகையில் “தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை பொறுத்தவரையில் பலரும் உலக கல்வியின் மீது ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை, வரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர். எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு முதல் இளம் இஸ்லாமியன் என்னும் மார்க்க அறிவு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு இயக்கம் மற்றும் அமைப்பும் சாராமல் இளைஞர்களால் நடத்தப்பட்ட இப்போட்டி கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் 14.01.2015 அன்று AL மெட்ரிக் பள்ளியில் இஸ்லாமிய மாணவர்கள் தேர்வெழுத ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டு தேர்வெழுதினர். இதனையடுத்து போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு நாளையதினம் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிப்பெற்ற மற்றும் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் “இளைஞர்களும் நண்பர்களும்”, “இண்டர்நெட்டும் இளைஞர்களும்”, மற்றும் “பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள்” என்ற பல்வேறு தலைப்புகளில் உலமா பெருமக்கள் சிறப்பு மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
பரிசு பெற்ற மாணவர்கள் விபரம்:
பிரிவு - A
முதல் பரிசு: ஹமீத் அக்ரம்
இரண்டாம் பரிசு: அஹமது ஜிஃப்ரி
மூன்றாம் பரிசு: M.Y.அஹமது
பிரிவு-B
முதல் பரிசு: ஹுசைன்
இரண்டாம் பரிசு: அப்துல் கஃப்பார்
மூன்றாம் பரிசு: F.ஃபவ்ஜான்
மேலும் இதில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அருமை, அருமை,
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
வெற்றிப்பட்ட அனவைர்க்கும் எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteமாணவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி, மேலும் பலபோட்டிகளில் கலந்து வெற்றிபெற வாத்துக்கள், வெற்றி பெறாத மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம்.
ReplyDeleteசகோ மஸ்தான் கனி அவர்களுக்கு,
ReplyDeleteஅனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.