துபாய் 2015 ஷாப்பிங் ஃபெஸ்டிவல் எனும் மலிவுவிலையில் பற்பல வண்ணப் பொருட்களின் விற்பனைத் திருவிழா கடந்த ஜனவரி 1 ந் தேதிமுதல் தொடங்கப்பட்டு சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. துபையின் அனைத்து முக்கிய இடங்களும் வெளிநாட்டவரின் வருகையில் நிரம்பி கலைகட்டிவருகிறது. ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்துவதற்க்கென பிரத்தியேகமாக குளோபல் வில்லேஜ் [Global Village] என்று அழைக்கப்படும் ஷாப்பிங் பெஸ்டிவல் சிட்டி நிரந்தரமாக பிரமாண்டமாக உருவாக்கி வைத்து இருந்தாலும் ஆங்காங்கே துபையின் முக்கிய சில பகுதிகளிலும் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்தப்பட்டு பொருட்கள் விற்பனை நிலையங்களுடன் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பொதுமக்களை கவரும்படி அமைக்கப்பட்டு உள்ளன.
முக்கிய வீதிகள் எங்குபார்த்தாலும் இரவைப் பகலாக்கிக் காட்டும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட துபாய் நகரைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த ஒருமாத ஷாப்பிங் ஃபெஸ்டிவல் திருவிழாவில் வெளிநாட்டவரின் விற்பனை நிலையங்கள் அதிகமாக இடம்பெற்று இருப்பதுடன் அந்தந்த நாட்டு கலாச்சாரப் பொருட்களும் மற்ற புதுப்புது வரவுகளும் இந்த ஷாப்பிங் பெஸ்டிவலில் தாராளமாக வாங்கி மகிழலாம்..
அதன் ஒருபகுதியாக டேரா துபையின் மத்திய பகுதியான ஜமால் அப்துல் நாசர் சதுக்கம் [ NASER SQUARE ] பகுதியில் நடந்து கொண்டிருக்கும் ஷாப்பிங் பெஸ்டிவல் விற்பனை நிலையங்களிலும் பல வண்ண வண்ணப் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
அதன் புகைப்படங்கள் இதோ......













No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.