விழாவில் கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் அ. ஜலால் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனை பிரிவில் தானாக முன்வந்து சேவையில் ஈடுபடும் திருநங்கைகள் ஷில்பா மற்றும் ஷிரேயா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களோடு கலந்துரையாடல் செய்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர் பேராசிரியைகள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.











எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவியை, 10ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள தமிழகத்தில் - ஒரு பள்ளி மறுத்ததை யாவரும் அறிவர். ஹெச் ஐவி தொற்று பாதித்த மக்களை ஒதுக்குவது தவறு சட்டவிரோதம். அவர்களோடு பணியாற்றுவதோ, கல்வி பயில்வதோ ஒரே அறையில் தங்குவதோ, உடன் உணவருந்துவதோ யாருக்கும் எந்த அபாயத்தினையும் விளைவிக்காது. அவர்களும் சராசரி மக்களே.
ReplyDeleteஅரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிராம நகரப்பகுதிகளிலும் இந்த தொற்று பாதித்த மக்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
HIV எப்படி பரவும், எப்படி பரவாது என்று அறிவியல் எவ்வளவு தான் சொன்னாலும் மக்கள் ஒப்புக் கொள்வது கடினமே என்றாலும் தொடர்ந்து இம்மாதிரி கருத்தரங்கு பயனுள்ளதாக மாணவர்களுக்கு அமையும். திருநங்கைகளுக்கு பாராட்டுக்கள்.