.

Pages

Monday, January 12, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நேற்று 11-01-2015 நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலகுகள் 125, 126, 127, 128 சார்பாக “எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் அ. ஜலால் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனை பிரிவில் தானாக முன்வந்து சேவையில் ஈடுபடும் திருநங்கைகள் ஷில்பா மற்றும் ஷிரேயா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களோடு கலந்துரையாடல் செய்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர் பேராசிரியைகள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவியை, 10ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள தமிழகத்தில் - ஒரு பள்ளி மறுத்ததை யாவரும் அறிவர். ஹெச் ஐவி தொற்று பாதித்த மக்களை ஒதுக்குவது தவறு சட்டவிரோதம். அவர்களோடு பணியாற்றுவதோ, கல்வி பயில்வதோ ஒரே அறையில் தங்குவதோ, உடன் உணவருந்துவதோ யாருக்கும் எந்த அபாயத்தினையும் விளைவிக்காது. அவர்களும் சராசரி மக்களே.

    அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிராம நகரப்பகுதிகளிலும் இந்த தொற்று பாதித்த மக்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

    HIV எப்படி பரவும், எப்படி பரவாது என்று அறிவியல் எவ்வளவு தான் சொன்னாலும் மக்கள் ஒப்புக் கொள்வது கடினமே என்றாலும் தொடர்ந்து இம்மாதிரி கருத்தரங்கு பயனுள்ளதாக மாணவர்களுக்கு அமையும். திருநங்கைகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.