.

Pages

Sunday, January 11, 2015

மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட திரு ரவிச்சந்திரனுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி !

அதிரை காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் திரு. ரவிச்சந்திரன். அதிரை சுற்று வட்டார பகுதிகளில் திறம்பட பணியாற்றி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக திரு. ரவிச்சந்திரன் அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு அதிரை காவல்நிலையத்தில் திரு.ரவிசந்திரன் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் ஜெகதிஸ்வரன், சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் செந்தில், பட்டுக்கோட்டை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிரை காவல்நிலைய  துணை ஆய்வாளர்கள் பசுபதி, ஜீவானந்தம், சுந்தர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார்கள் கலந்துகொண்டு திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அதிரையில் காவல்துறை ஆய்வாளராக பணி செய்தபோது நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் இவர் ஆற்றிய சேவை குறித்தும் எடுத்துரைத்தனர். இதன்பின்னர் ஏற்புரை வழங்கிய திரு. ரவிச்சந்திரன் அவர்கள் சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய அதிரை பொதுமக்கள், வர்த்தகர்கள், மீடியா நண்பர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் சிறந்த ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்கிய உயர் அதிகாரிகள், சக அதிகாரிகள், தனது பொறுப்பின் கீழ் இருக்கும் அனைத்து காவல்துறையினருக்கும் நன்றி கூறினார்.

அதிரையில் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் வகித்து வந்த பொறுப்பை இனி கூடுதலாக சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் செந்தில் கவனித்து வருவார் என கூறப்படுகிறது.

அதிரை நியூஸின் 'பிரதான செய்தியாளர்' இத்ரீஸ் மரைக்கா காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த வழியனுப்பிய போது எடுத்த படம்


1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.