விழாவில் கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் அ. ஜலால் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக அதிரை கவிஞர் திரு.அண்ணா சிங்காரவேலு கலந்து கொண்டு தூய்மை இந்தியா பற்றி பல கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், பேராசிரியர் சையது அகமது கபீர் மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் செய்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளுக்கு இவ்விழா பயன்பெறும் வகையில் அமைந்தது.







திட்டம் அறிவிப்பதில் அரசியல்வாதிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கடந்த 7 மாதங்களில் காணலாம் , எந்த திட்டமும் நிறைவேறப் போறதில்லை வாயிலேயே வடைசுட்டு 5 வருடம் ஓட்ட தான் பார்க்கிறார்கள். தூய்மை திட்டம் கருத்தரங்கால் மாணவர்களிடையே எந்தளவுக்கு தாக்கம் ஏற்படும் என்று சொல்ல இயலாது, பிரபலங்கள் துவக்கிய திட்டம் எல்லாம் நடைமுறையில் உள்ளதா? நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலமாக மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை மாணவர்களுக்கு கொடுங்கள் அது பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteபேனா பிடித்த கைகளில் இப்போ துடைப்பம் பார்க்க நல்லா தான் இருக்கு செயலுக்கு வருமா?