.

Pages

Sunday, January 11, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் என்எஸ்எஸ் நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 08.01.2015 அன்று நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலகுகள் 125, 126, 127, 128 சார்பாக “தூய்மை இந்தியா” என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் அ. ஜலால் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக அதிரை கவிஞர் திரு.அண்ணா சிங்காரவேலு கலந்து கொண்டு தூய்மை இந்தியா பற்றி பல கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், பேராசிரியர் சையது அகமது கபீர் மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் செய்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளுக்கு இவ்விழா பயன்பெறும் வகையில் அமைந்தது.



1 comment:

  1. திட்டம் அறிவிப்பதில் அரசியல்வாதிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கடந்த 7 மாதங்களில் காணலாம் , எந்த திட்டமும் நிறைவேறப் போறதில்லை வாயிலேயே வடைசுட்டு 5 வருடம் ஓட்ட தான் பார்க்கிறார்கள். தூய்மை திட்டம் கருத்தரங்கால் மாணவர்களிடையே எந்தளவுக்கு தாக்கம் ஏற்படும் என்று சொல்ல இயலாது, பிரபலங்கள் துவக்கிய திட்டம் எல்லாம் நடைமுறையில் உள்ளதா? நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலமாக மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை மாணவர்களுக்கு கொடுங்கள் அது பயனுள்ளதாக இருக்கும்.

    பேனா பிடித்த கைகளில் இப்போ துடைப்பம் பார்க்க நல்லா தான் இருக்கு செயலுக்கு வருமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.