.

Pages

Friday, January 9, 2015

அதிரை ஜும்மா பள்ளிகளில் கல்வித்தந்தை பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகை !

மறைந்த கல்வித்தந்தையும், பிரபல தொழில் அதிபருமான அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இன்று அதிரையில் நடைபெற்ற ஜும்மா தொழுகைக்கு பிறகு காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.

ஆலடி தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெற்ற காயிப் ஜனாஸா தொழுகைக்கு முன்னதாக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மறைந்த கல்வித்தந்தை ஆற்றிய தொண்டு குறித்தும், நமதூருக்கும் கல்விதந்தைக்குமான உறவு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார்.

அதேபோல் அதிரை பெரிய ஜும்மா பள்ளி உள்ளிட்ட அதிரையின் ஏனைய ஜும்மா பள்ளிகளிலும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொழுகையில் அதிரையர் கலந்து கொண்டு மறைந்த பெரியவருக்காக  இறை வேண்டுதல் செய்து தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்

3 comments:

  1. கல்வி சேவையில் மிக முக்கிய நபர் அப்துர் ரஹ்மான் சாஹிப்.பதிவை பதிந்த அதிரை நியூஸ்க்கு நன்றி .நான் பெரிய ஜும்ஆ பள்ளிக்கு சென்றேன் தொழுகை நடத்த படவில்லை.மொய்தீன் பள்ளியில் தொழுகை நடைபெற்றதை உங்கள் தளத்தின் மூலம் அறிந்தேன்

    ReplyDelete
  2. அல்ஹாஜ் பி எஸ் .அப்துல் ரஹ்மான் அவர்கள் கல்வி மட்டுமல்ல எத்தனையோ ஏழைக் குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் குறிப்பாக துபையில் பலபேருக்கு வேலைவாய்ப்பளித்தவர்.

    அன்னாரின் மறுமைவாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோமாக !

    ReplyDelete
  3. அன்னாரின் மறுமைவாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோமாக !

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.