.

Pages

Saturday, January 17, 2015

அதிரையில் அதிமுகவினர் நடத்திய எம்ஜிஆர் பிறந்தநாள் பேரணி !

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் இன்று காலை அதிரையில் நகர அதிமுக கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.

முன்னதாக அதிமுக கட்சியினர் பிறந்தநாள் பேரணியை இன்று காலை 8 மணியளவில் நடத்தினர். பேரணி அதிரை பேருந்து நிலைய பகுதியை சுற்றி திரும்பியது. இதில் அதிமுகவின் அதிரை நகர செயலாளர் பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் அபூபக்கர், நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, வார்டு கவுன்சிலர்கள் சிவக்குமார், ரவிக்குமார், அபூதாகிர், அப்துல் லத்தீப், சேனா மூனா ஹாஜா முகைதீன், அதிமுக வார்டு செயலாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. பரவா இல்லீங்க, இந்த கட்சிகாரங்க எம்.ஜி ஆரை இன்னமும் நியாபகம் வச்சி இருக்காங்க போல, ஆட்சில் இருந்தால் சசி & கோ நினைப்பு தான், ரொம்ப இக்கட்டான நிலைமையில் மட்டும்தான், "எம்ஜிஆர் " பெயரை அழுத்தமாக உச்சரிப்பார் அம்மையார். எம்ஜியாரும்,இரட்டை இலையும்தான் அம்மாவின் பலம்....அது எப்போதும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் இனி வரும் தேர்தலில்.

    எம்.ஜி ஆர் ஒரு பட பாடலில் " சதி செயல் செய்தவன் புத்திசாலி, அதை சகித்துக்கொண்டு இருந்தவன் குற்றவாளி" என்று பாடியுள்ளார்." சகித்துக்கொண்டு இருந்தவன் யார் ? பொது மக்கள் தானே?. ஆதிக்கம் செலுத்திவரும் பாசிச காட்சியே திராவிட கட்சிகள் முறியடிக்குமா?

    ReplyDelete
  2. யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்கா ..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.