கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேம்பு, புங்கை, பன்னீர், வாகை சுமார் 1000க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் வளர்த்துள்ளார். தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுங்களை நட்டு பராமரிப்பு செய்து வருகிறார். இப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டு பசுமை சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் இவரின் மரம் வளர்ப்பு பணி இப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் யாசின் கூறியதாவது:
விற்பனைக்கு வரும் விறகுகளை கண்டு மிகவும் மன வேதனையடைந்தேன். இதற்கு மாற்றாக நாம் ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் 10 வருடங்களுக்கு முன் மரக்கன்று நட தொடங்கினேன். பின்னர் அதுவே முழுநேர பணியாகி இப்போது நான் நட்ட கன்றுகள் 1000க்கும் மேற்பட்ட மரமாக வளர்ந்து நிற்கிறது. நாம் வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல பணிகள்தான் நம்மை நிம்மதியடைய செய்யும். பணம் தராத மன மகிழ்ச்சியை இந்த மரக்கன்று நடும் பணி தருகிறது. மனம் நிறைவாக இப்பணியை செய்து எனது வருமானத்தில் சுமார் 50 சதவீதத்தை இப்பணிகளுக்கு செலவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
இவரை போன்று நாமும் மரம் வளர்ப்போம்! இயற்கையை பேணி பாதுகாப்போம்!
நன்றி:தினகரன்



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
என்றைக்குமே முதிர்ந்ததுதான் பலன் தரும், அதுபோல் இந்த முதிர்ந்த வயதிலும் இவர் செய்யும் இந்தக் காரியம் மகத்தானது, இவரைபோல் முதிர்ந்தது எத்தனையோ !!!!!!!!!!!???????????????
இருந்தாலும் முதிர்ந்ததுக்கு தோதாக முதிர்ந்த எண்ணங்கள் இல்லாததினால் நடக்கவேண்டிய நல்ல காரியங்கள் தடைபட்டு போய்விடுகின்றன.
நாமும் முயற்சி செய்வோம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com