.

Pages

Tuesday, January 13, 2015

பட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி !

பட்டுக்கோட்டையில் நேற்று 26வது சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணியளவில் புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 11ம் தேதி முதல் 13 ம் தேதிவரையிலும், தொடர்ந்து 18ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் கடைபிடிக்கப்படுகிறது. பேரணியினை பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ அரங்கநாதன், மற்றும் ஏ.எஸ்.பி திபாகணிக்கர் ஆகியோர் துவக்கிவைத்தனர். பேரணியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ ரெங்கராஜன், நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, துணைத்தலைவர் பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் சாலை விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுங்கள் வழங்கியபடியும் பேரணியில் சென்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.