இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் கூறுகையில் “தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை பொறுத்தவரையில் பலரும் உலக கல்வியின் மீது ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை, வரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர். எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு முதல் இளம் இஸ்லாமியன் என்னும் மார்க்க அறிவு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு இயக்கம் மற்றும் அமைப்பும் சாராமல் இளைஞர்களால் நடத்தப்படும் இப்போட்டி கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் 14.01.2015 அன்று AL மெட்ரிக் பள்ளியில் இஸ்லாமிய மாணவர்கள் தேர்வெழுத ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டு தேர்வெழுதினர். இதனையடுத்து போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு நாளையதினம் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் நடைப்பெற உள்ள பரிசளிப்பு விழாவில் வெற்றிப்பெற்ற மற்றும் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதுசமயம் “இளைஞர்களும் நண்பர்களும்”, “இண்டர்நெட்டும் இளைஞர்களும்”, மற்றும் “பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள்” என்ற பல்வேறு தலைப்புகளில் உலமா பெருமக்கள் சிறப்பு மார்க்க சொற்பொழிவும் ஆற்ற உள்ளனர். ஆகையால் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இதுபோல் கடந்த ஆண்டு இளம் இஸ்லாமியன் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலன்ச்சிரார்கள்; மார்க்க அறிவு திறன் போட்டி நடத்தி அவர்களை ஊக்குவிப்பது வரவேற்க தக்கவை, மார்க்க கல்வி அவசியம் என்பதை எல்லா பெற்றோர்களும் உணரவேண்டும், உலக கல்விக்கு கொடுக்கும் ஆர்வம் மார்க்க கல்விக்கு உண்டா? பள்ளி மாணவர்களுக்கு சீருடை உண்டு அதை அணியா விட்டால் பனிஷ்மெண்ட் உண்டு, தவறாமல் பீஸ் கட்டி விடுகிறோம் இல்லையேல் எக்ஸாம் எழுத அனுமதி இல்லை இப்படி எதை சொன்னாலும் செய்யும் நாம், மார்க்க கல்வி கற்க ஏதாவது முயற்சி உண்டா? ஊரில் உள்ள எல்லா மதரசாக்கள்; குழந்தைக்கு ஒருங்கிணைந்த குரான் கற்கும் முறை, சீருடை திட்டம் கொண்டு வரவேண்டும்.
ReplyDeleteஇளம் இஸ்லாமியன் நிர்வாகிகளின் பங்கு போற்றக்கூடியதும் அவர்கள் மார்க்க கல்வி விசயத்தில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும், கணினி மூலம் குரான் ஓதும் முறை அறிமுகம் செய்ய வேண்டும் ஓதினால் மட்டும் போதாது அதற்க்கு அர்த்தம் தெரிய வேண்டும், சிந்தியுங்கள் - செயல்பட வாழ்த்துக்கள்.