உலகத்தின் மிக நீளமான தங்கச் சங்கிலி என்ற கின்னஸ் உலக சாதனை படைத்த இந்த சங்கிலி மொத்தமாக 256 கிலோ கிராம் எடை கொண்டது மேலும் 5.52 கிலோ மீட்டர் நீலம் ஆகும். இதில் சுமார் 150 கிலோவிற்கும் அதிகமாக தற்பொழுது விற்றுள்ளதாகவும், மீதம் உள்ள சங்கிலி விரைவில் விற்பனையாகும் எனவும் துபாய் தங்கம் மற்றும் நகைகள் குழுமத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுமத்தின் நிர்வாக மேளாளர் திரு. டாமி ஜோசப் கூறுகையில்...
“இந்த விற்பனை தொடங்கி குறைந்த நாட்கள் ஆன நிலையில் 150 கிலோ மதிப்புள்ள தங்கச்சங்கிலி விற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார். மேலும் “5.52 கிலோ மீட்டர் தூரமுள்ள சங்கிலியை தற்போது மக்கள் பார்வைக்காக கோல்டு சவுக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 கிலோ மீட்டர் சங்கிலி ஏற்கனவே விற்றுவிட்டதாகவும். இம்முறை அதிக அளவில் இந்தியர்கள், ஆசியர்கள், மேற்கத்திய மக்கள், அரேபியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்திருந்தது பெருமையளிக்கிறது” எனவும் கூறினார்.
சென்ற வருடம் நடந்த, இதற்கு முந்தைய முயற்சியில் அதிகமாக செயின் வாங்கியது இந்தியர்கள், அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஜனவரி 9, 2015 வரை இந்த செயின் மக்களின் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அதற்குப்பிறகு அந்தந்த நகையின் விற்பனையாளர்கள் தத்தம் நகைகளை பதிவு செய்யப்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் மீதம் உள்ள தங்கள் நகையை திரும்பவும் எடுத்துக்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இதெல்லாம் படிப்பதற்கு நல்லாத்தான் இருக்குது, அதிரையில் ஒரு பெண்ணை (காட்டிக் கொடுக்க) கட்டிக் கொடுக்க படும் திண்டாட்டம் இருக்கே, அதுவும் நல்லாத்தான் இருக்குது.
അന്ത നീനുന് പരിയുറത്തു ഒന്നും മനസിലായിട്ടുലെ.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
Panaththimir............
ReplyDelete