.

Pages

Monday, January 5, 2015

செக்கடிமேடு ரேஷன் கடையில் பொருள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி சென்ற அட்டைதாரர்கள் !

அதிரை செக்கடி மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, சீனி, பாமாயில், மண்ணெண்ணை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான பொருட்கள் மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கப்பட்டு வரும். இவற்றை இப்பகுதியின் அட்டைதாரர்கள் பெற்றுச்செல்வார்கள். இதனால் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் தமிழர் பண்டிகை அடுத்த வாரம் வர உள்ள நிலையில், ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தும் கடையின் பொறுப்பாளர் சரியான நேரத்திற்கு வந்து கடையை திறக்காததால் இன்று அதிகாலை முதல் கால் கடுக்க நின்று கொண்டிருந்த ஏராளமான அட்டைதாரர்கள் வெறுங்கையுடன் முனுமுனுத்தப்படி திரும்பிச்சென்றனர்.

2 comments:

  1. பொருல்கள் இருந்தும் ஆயில் மட்டும் வினியோகம் செய்து மக்களை அலைக்கலைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.